இரண்டு ஆண்டுகளாக பிரித்தானியரான தன் காதலரை தேடிய அமெரிக்க இளம்பெண் ஒருவர், கடைசியாக அவரைக் கண்டுபிடித்தபோது அவருக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கரான Kate Lefler (23) கடலோர பாதுகாப்புப் படையிலிருக்கும்போது அவரது கப்பல் பிரித்தானியாவின் Devonஇல் நின்றிருக்கிறது.
அப்போது பார் ஒன்றிற்கு சென்ற Kate, அங்கு Adam என்பவரை சந்தித்திருக்கிறார். இருவரும் சந்தித்ததும், இருவருக்கும் இடையே மின்சாரம் பாய்ந்தது போல் இருந்ததாம்.
இரவு, முத்தத்துடன் விடைகொடுத்துவிட்டு இருவரும் பிரியும்போது Adamஇடம் தனது மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு பிரிந்திருக்கிறார் Kate. மறுநாள் மீண்டும் சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், Adamஇடம் இருந்து எந்த தகவலும் வரவில்லையாம்.
பிறகுதான் Kateக்கு புரிந்திருக்கிறது, தான் மொபைல் எண் கொடுக்கும்போது தனது ஏரியா கோடை குறிப்பிட மறந்துவிட்டோம் என்பது.
காதலால் வாடிய Kate, இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை துவக்கி Adamஐ இரண்டாண்டுகளாக தேடிவந்திருக்கிறார்.
பலரது உதவியுடன் கடைசியாக Kate, Adamஐ கண்டுபிடித்துவிட்டார். ஆனால், Adamக்கு இப்போது ஒரு காதலி இருக்கிறார் என்பது தெரியவரவே பயங்கர ஏமாற்றமாகிவிட்டிருக்கிறது Kateக்கு.
இருந்தாலும், தனக்காக Adamஐ தேடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள Kate, அவர் இப்போது வேறொரு பெண்ணைக் காதலிக்கிறார், ஆகவே, அவரது காதலுக்கும், தனியுரிமைக்கும் மதிப்பளித்து, இத்துடன் எனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் அவர்.