அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கர்ப்பிணி ஒருவர் விமானத்தில் மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை பெற்றுள்ளார்.
பறக்கும் விமானத்தில் 18 ஆயிரம் அடி உயரத்தில் தமக்கு ஆண் பிள்ளை பிறந்துள்ளதால், குழந்தைக்கு ஸ்கை என புதுமையாக பெயரிட்டுள்ளனர்.
அலாஸ்கா மாகாணத்தின் கிளனல்லன் என்ற பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு விமானத்தில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கிறிஸ்டல் ஹிக்ஸ் என்ற அந்தப் பெண்மணிக்கு குழந்தை பிறந்தது.
அது வித்தியாசமான முதல் அனுபவம் என்பதால், அந்தக் குழந்தைக்கு ஸ்கை என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். குறைமாதத்தில் குழந்தை பிறந்துள்ளதால், அதற்கு சுவாசக்கருவி பொருத்தியுள்ளனர். மேலும், பிறப்புச் சான்றிதழை நிரப்புவது கடினம் என்று அந்த தாய் நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
ஏனெனில் பூமியில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.