அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண் கமலா! அறிவித்த 24 மணி நேரத்தில் குவிந்த நிதி: எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஜனநாயக கட்சிக்கு நிதி குவிந்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

இந்தக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்தபோது, கட்சிக்குள் ஜோ பிடனுக்கு எதிராக போட்டியிட்டவர் கமலா ஹாரிஸ்.

(AP)

ஆனால், தன்னால் பிரசாரம் செய்ய முடிய வில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாபஸ் பெற்றார்

இதையடுத்து, அதிபர் வேட்பாளருக்குத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸையே துணை அதிபர் வேட்பாளராக, ஜோ பிடன் தேர்வு செய்து அறிவித்தார், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

இதற்கிடிஅயில், கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இன வெறிக்கு எதிராகவும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கமலா ஹாரிஸை டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

(Photo: AFP)

இது, அமெரிக்க மக்களிடையே கமலா ஹாரிஸுக்கு ஆதரவை அதிகப்படுத்தியுள்ளது. துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸைத் தேர்வு செய்துள்ளதை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஆதரித்துள்ளனர்.

இதனால் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்திய மதிப்பில் 194 கோடி ரூபாய் நிதியை ஜனநாயக கட்சி திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

BRENDAN MCDERMID / REUTERS

அக்கட்சியின் ஆன்லைன் நிதி திரட்டும் பிரிவான ஆக்ட் ப்ளு, ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன் டொலர்களை நன்கொடையாக பெற்றதாக அறிவித்துள்ளது.

ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நன்கொடையாளர்களை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டலில் ஹாரிஸ் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்