விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட இளம் தாயார் மற்றும் 3 வயது மகன்! வேதனையுடன் அவர் கூறிய காரணம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவன் முகத்தில் மாஸ்க் அணிய மறுப்பு தெரிவித்த நிலையில் தாயாருடன் சேர்ந்து விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டுள்ளார்.

Southwest ஏர்லைன் விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மிட்லேண்ட் டெக்சாஸ் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் கிளம்பியது.

அப்போது விமானத்தில் இருந்த அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் Alyssa Sadler என்ற பெண்ணின் 3 வயது மகன் மட்டும் மாஸ்க் அணிந்து கொள்ள முடியாது என அடம் பிடித்தான்.

Alyssa Sadler அவன் முகத்தில் மாஸ்க் அணிவிக்க முயன்ற போது வேண்டாம் என கத்தி கூச்சலிட்டான், அப்போது தான் அவன் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து விமான நிலையத்தின் நுழைவாயில் கதவை நெருங்கிய விமானம் நிறுத்தப்பட்டு விமானத்தில் இருந்து Alyssa Sadler மற்றும் அவர் மகன் இறக்கிவிடப்பட்டனர்.

இது குறித்து Alyssa Sadler கூறுகையில், என் மகனுக்கு உணர்ச்சி செயலாக்க கோளாறு உள்ளது.

இதனால் அவன் முத்தை தொட்டால் அவனுக்கு பிடிக்காது.

இது தொடர்பான மருத்துவரின் அறிக்கையை விமான ஊழியர்களிடம் காட்டியும் அவர்கள் கேட்கவில்லை.

பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டியது அவசியம் தான், ஆனால் இது போன்ற குறைபாடு கொண்டவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள விமான நிறுவனம், எந்தவொரு காரணத்திற்காகவும் எங்கள் பயணிகள் மாஸ்க் அணியாவிட்டாலும் அவர்களை அழைத்து செல்ல முடியாது.

அது போன்ற சமயங்களில் பயணிகளின் பணத்தை திரும்பி கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்