கர்ப்பிணிப் பெண் மீது மோதிய கார்... நாடித்துடிப்பை சோதித்து கதறிய கணவன்: அமெரிக்காவில் ஒரு திடுக் சம்பவம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கலிபோர்னியாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் ஒருவர் மீது கார் ஒன்று மோத, நிறைமாத கர்ப்பிணியான அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் அவர்.

குழந்தையில்லாமல் கவலையடைந்திருந்த ஒரு தம்பதி, இரண்டு ஆண்டுகளாக முயன்று, கடைசியாக கர்ப்பமான நிலையில், தன் குழந்தையைப் பார்க்காமலே உயிரிழந்துள்ளார் Yesenia Lisette Aguilar (23) என்ற அந்த பெண்.

நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் அவரது கணவர் James Alvarez வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஜீப் ஒன்று சாலையை தாண்டி நடைபாதையில் ஏறி Yesenia மீது மோதியுள்ளது.

இரத்த வெள்ளத்தில் அசைவற்றுக் கிடந்த தன் மனைவியின் நாடித்துடிப்பை சோதித்துவிட்டு, அவர் அலறியதைக் கண்ணால் பார்த்த ஒருவர் இன்னமும் தான் அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை என்கிறார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Yeseniaவின் வயிற்றிலிருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

குழந்தை இன்னமும் திவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க, மருத்துவர்களால் Yeseniaவைக் காப்பாற்ற முடியவில்லை.

இதற்கிடையில் Yesenia மீது காரை மோதிய Courtney Pandolfi(40) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவரது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டிருந்ததுடன், Courtney விபத்தை ஏற்படுத்தியபோது, போதைப்பொருள் அல்லது மதுபானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

விபத்தில் அவருக்கும் சிறிது காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து Courtneyயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோவை காண

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்