கமலா ஹரீஸ் வெற்றிக்காக வேண்டும் ஒட்டு மொத்த கிராமம்! பெருமைப்படும் தமிழர்கள்: கல்வெட்டில் பெயர்

Report Print Santhan in அமெரிக்கா
389Shares

அமெரிக்கா துணை அதிபர் தேர்தலில் போட்டியிடம் கமலா ஹரிஸை நினைத்து தமிழகத்தில் இருக்கும் அவரின் சொந்த ஊர் கிராம மக்கள் மிகவும் பெருமையாக உள்ளனர்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இரு கட்சி ஆட்சி முறையை பின்பற்றும் அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடும்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 55 வயதான பெண்மணியும் போட்டியிடுகின்றனர்.

Scott Olson/Getty

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவது இதுதான் முதல் முறையாகும்.

இது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கக்கூடிய ஒன்றாகும். அதிலும் கமலா ஹாரிஸ், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாட்டை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்று செய்தி வெளியானது.

கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

கமலா ஹாரிஸ் தாத்தா கோபாலன், சிவில் சர்வீஸ் பணியில் 1930-ஆம் ஆண்டு பணியாற்றியவர். அப்போது ஜாம்பியா நாட்டிற்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு கோபாலனை அனுப்பியுள்ளது.

பின்னர் கோபாலன், அமெரிக்காவில் குடியேறி உள்ளார். கோபாலனுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்தான் இன்று அமெரிக்கா துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் துளசேந்திரபுர கிராமத்தில், கமலா ஹரிஸின் பேனர்களும், அவர்களுக்கு வாழ்த்துகளும் தான் எங்கு பார்த்தாலும் இருக்கிறது.

வயல்வெளி, கடைத்தெரு என ஆங்காங்கே ஊர்கிராம மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்களை வைத்துள்ளனர்.

தாத்தா கோபாலன் வாழ்ந்த வீடு, இப்போது பலரி கை மாறி காலிமனையாக கிடக்கிறது. இந்த கிராமத்திற்கும், இவர்களுக்கும் இடையே இருக்கும் உறவு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இங்குள்ள இவர்களின் குலதெய்வக் கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கமலா ஹரிஸ் ரூபா 5000 நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரை அங்கிருக்கும் கிராம மக்கள் பலரும் பார்த்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வுடன் இருக்கும் மக்கள், அவர் இந்த தேர்தலில் ஜெயித்துவிட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதுமட்டுமா அங்கிருக்கும் கிராம மக்கள் பலரும் கமலா ஹிரிசை நினைத்து பெருமைப்படுவதுடன், எங்க கிராமத்து பிள்ளை என்று கூறி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்