அமெரிக்க தேர்தல் களத்தில் மேகன் மெர்க்கல்: மிஷெல் ஒபாமாவுடன் பரப்புரை

Report Print Arbin Arbin in அமெரிக்கா
243Shares

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்க்கல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக பரப்புரையில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டின் அனைத்து பெண்களும் தங்கள் வாக்குரிமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா தன்னார்வலராக பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஆகஸ்டு 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் பரப்புரையில் Duchess of Sussex என அறியப்படும் மேகன் மெர்க்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மேகன் மெர்க்கலுடன் மேலும் நான்கு பிரபலமான பெண்கள் குறித்த இணையம் வழியான பரப்புரையில் பங்கேற்கின்றனர்.

பிரித்தானிய நேரப்படி இரவு 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி நேரலை செய்யப்படுகிறது.

பொதுவாக பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது இல்லை.

தற்போது சான்றா பார்பராவில் கணவர் ஹரியுடன் குடியிருக்கும் மேகன் மெர்க்கல், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வாக்களிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மட்டுமின்றி பொதுமக்கள் கண்டிப்பாக தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் மேகன் மெர்க்கல் கோரிக்கை விடுத்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார் மேகன் மெர்க்கல்.

டிரம்பிடம் இது தொடர்பில் பத்திரிகைகள் கேள்வி முன்வைத்த போது, மேகன் மெர்க்கலை தமக்கு தெரியாது எனவும்,

மெர்க்கல் இவ்வளவு இழிவானவர் என்பது எனக்கு தெரியவில்லை எனவும் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்