பல மில்லியன் மக்கள் இன்னும் இறப்பார்கள்... காரணங்கள் இதுவல்ல: போட்டுடைத்த பில்கேட்ஸ்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
5800Shares

கொரோனா தொற்று முடிவுக்கு வரும் முன்னரே மேலும் பல மில்லியன் மக்கள் இறப்பார்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த இறப்புகளுக்கு கொரோனா காரணமல்ல, மாறாக சுகாதார அமைப்புகள் மற்றும் பொருளாதார சுமையே காரணமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று உலக நாடுகள் பலவற்றை கடுமையாக உலுக்கி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணிகள் பல்வேறு நாடுகளில் வேகமெடுத்துள்ளன.

ரஷ்யா முதல் நாடாக கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அறிவித்தாலும், அதன்மீதான பாதுகாப்பு அம்சங்கள் கேள்விகுறியாக உள்ளது.

உலக அரங்கில் இதுவரை எந்த தகவலையும் தடுப்பூசி தொடர்பில் வெளியிடாத இந்தியாவில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், வரும் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் நியாயமான விலையில் பயனுள்ள கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் உற்பத்தியில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, கொரோனா தொற்றின் பரவல் குறையும்.

90 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொரோனா தொற்றுடன் தொடர்பில்லாதவை. ஊரடங்கு நடவடிக்கை, பிற நோய்களுக்கான மருத்துவ வசதி கிடைப்பதை தடை செய்துள்ளது. இதன் விளைவாக மலேரியா மற்றும் எச்.ஐ.வி., நோயால் இறப்பு அதிகரிக்கும்.

கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைக்கு, பில்கேட்ஸ் அறக்கட்டளை 350 மில்லியனுக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளது.

ஆனால் அது போதாது. இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. டிரில்லியன் கணக்கான செலவுகளை ஏற்படுத்தும் பொருளாதார சேதத்தை தடுக்க கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல பில்லியன் டொலர்கள் செலவிடப்பட வேண்டும்.

பல ஏழை நாடுகளில் சேத விவரங்களை துல்லியமாக கணக்கிடுவது மிகவும் கடினம். ஆகஸ்டு 17 ஆம் திகதிக்குள், ஆப்பிரிக்காவில் 25,000க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கிட்டத்தட்ட 52,000 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இருப்பினும், இரு இடங்களிலும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க கூடும் என்றார் பில்கேட்ஸ்.

கொரோனா நோய்த்தொற்று குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், புழக்கத்தில் உள்ள மற்ற கொரோனா வைரஸ்கள் புதிய கொரோனாவுக்கு எதிராக குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை வழங்கியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

புதிய கொரோனா வைரஸ் வேறு சில தொற்றுநோய்களை போல அல்ல. உலக மக்கள்தொகையில் சுமார் 30 முதல் 60 சதவீதத்தினர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக இது அம்மை நோய் அல்ல என்பதால், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி எடுத்து கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார் பில்கேட்ஸ்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்