அமெரிக்காவின் முக்கிய பிரச்சனையை கையில் எடுத்து பேசிய கமலா! என்ன தெரியுமா? சூடுபிடிக்கும் தேர்தல்

Report Print Santhan in அமெரிக்கா
599Shares

அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரீஸ் இனவாத்திற்கு எதிராக எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை என்றும் அதை நாம் நினைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜனாநாயகட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இதில் ஜனநாயகட்சி சார்பில் துணை அதிபர் போட்டிக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரீஷை ஜோ பிடன் அறிவித்தார்.

அதன் பின் ஜோ பிடனுக்கு ஆதரவு குவிந்து வருவதுடன், தேர்தலுக்கு தேவையான நிதிகளும் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹரீஷ், இனபாகுபாடின்றி அனைவருக்கும் சம நீதி கிடைக்கும் என ஜனநாயக கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்ற பாடுபடும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இனவாதத்திற்கு என எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை. நாம்தான் அதற்கு எதிராக போராடி ஒழிக்க வேண்டும்.

ஜார்ஜ் பிளாய்டு, பிரியோன்னா டெய்லர் உள்ளிட்டோருக்காகவும், அதுமட்டுமின்றி இன்னும் ஏராளமானோரின் வாழ்க்கைக்காகவும் நம் குழந்தைகளுக்காகவும் நமக்காகவும் இனவாதத்தை ஒழிக்க வேண்டும்.

அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கும் வரை யாருக்கும் சுதந்திரம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேரி சர்ச் டெரீல், மேரி மெக்லியாடு பெத்துனே, பனி லோ ஹேமர், டயானே நாஷ், பேக்கர் மோட்லி, ஷிர்லி சிஸ்ஹோல்ம் ஆகிய பல பெண் அரசியல்வாதிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடியுள்ளனர்.

மேற்கண்ட பெண்கள் எந்த வித ஆரவாரமோ அங்கீகாரமோ இல்லாமல் வெறும் ஓட்டுக்காக மட்டுமே அவர்கள் போராடவில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என பாடுபட்டார்கள். ஜனநாயகத்தையும் வாய்ப்புகளையும் உண்மையானதாக மாற்ற இந்த பெண்களும் அவரை பின்தொடர்ந்த தலைமுறையினரும் உழைத்தனர். அவர்கள் ஒபாமா, ஹிலாரி உள்ளிட்டோர் தலைமை ஏற்க வழிவகுத்ததாக குறிப்பிட்டார்.

தற்போது அமெரிக்காவில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இனவாத பிரச்சனை உள்ளது. அதை கையில் கமலா ஹரீஷ் பேசியுள்ளதால், டிரம்ப் இதைப் பற்றி என்ன கூற போகிறார் என்பதை அவருடைய பிரச்சாரத்தின் போது தான் பார்க்க வேண்டும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்