அமெரிக்காவில் 50 பெண்களை துஷ்பிரயோகம் செய்ததோடு 13 கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலைகாரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் டி ஏஞ்சலோ என்ற குற்றவாளி 40 ஆண்டுகள் கழித்து பொலிசில் சிக்கிய பின்னரே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் காவலராக பணிசெய்து வந்த ஜோசபுக்கு சிறு வயதில் இருந்தே ஜாம்பி மற்றும் திகில் படங்களின் மீது தீராத பிரியம். ஒரு கட்டத்தில், தான் திரையில் பார்த்ததை நிஜத்தில் நிகழ்த்த இரவு வேளைகளில் முகமூடியுடன் தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்து அங்கு இருக்கும் ஆண்களை சுட்டுக்கொன்று விட்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்வதை வாடிக்கையாக்கியுள்ளார்.
குறிப்பாக, ஒதுக்குப்புறாக இருக்கும் வீட்டின் பின்பக்க ஜன்னல் வழியாக முகமூடி அணிந்தபடி உள்ளே நுழையும் ஜோசப், கணவனை சமையல் அறையில் கட்டிபோட்டுவிட்டு, மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதும், கணவன் சத்தமிட்டால் சுட்டுக்கொல்வதும் இவனது வழக்கம் என்கின்றனர்.
பகலில் காவலர் வேலை, இரவில் கொடூரக் கொலையாளி என 1976ல் தொடங்கி பத்தாண்டுகளில் 13 கொலைகள், 50 பெண்களிடம் பலாத்காரம், 100 கொள்ளைச் சம்பவங்கள் ஜோசப்பால் நிகழ்த்தப்பட்டவை, இந்த சம்பவங்கள் அப்போது நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவரை பிடிக்க 40 ஆண்டுகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு நடந்த குற்றம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்து கண்டறியப்பட்ட டி.என்.ஏ மூலம் பழைய குற்றவாளிகளின் டி.என்.ஏவை ஒப்பிட்டு பார்த்த போது, ஏரியில் மீனுக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருந்த ஜோசப் வசமாக பொலிசில் சிக்கிக் கொண்டான்.
கடந்த 2 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் 40 வருடங்களுக்கு முன்பு அந்த இரவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர்மல்க விவரித்தனர்.
இந்த நிலையில் ஜோசப்பின் 74 ஆவது வயதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.