4 வயது மகளின் கழுத்தை அறுக்க சொல்லி மிரட்டல் வந்தது! பொய் பேசிய இளம் தாயார்.. விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை

Report Print Raju Raju in அமெரிக்கா
182Shares

அமெரிக்காவில் தனது 4 வயது மகள் கழுத்தை அறுக்குமாறு தனக்கு மிரட்டல் வந்ததாக தாய் கூறிய நிலையில் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெக்சாஸை சேர்ந்தவர் Krystal Lewandowski (34). இவரின் 4 வயது மகள் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் வந்தது.

புகாரையடுத்து அவர் வீட்டுக்கு சென்று பொலிசார் விசாரித்தனர்.

அப்போது Krystal தனது குழந்தையை கடைசியாக வீட்டின் பின் பக்கத்தில் பார்த்ததாக கூறினார்.

மேலும், தனது குழந்தையின் கழுத்தை தான் அறுக்க வேண்டும் என உத்தரவு வந்தது, அப்படி செய்யவில்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என மிரட்டப்பட்டேன்.

ஆனால் நான் கழுத்தை அறுக்கவில்லை என கூறினார்.

இதன்பின்னர் வீட்டுக்கு பின்புறம் இருந்த குப்பை தொட்டையில் குழந்தையின் சடலத்தை பொலிசார் மீட்டனர்.

மேலும் பிரமாண பத்திரத்தில், Krystal தான் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்று சடலத்தை குப்பை பையில் வைத்து குப்பை தொட்டியில் போட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து Krystal கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் மற்ற தகவல்களை இன்னும் பொலிசார் வெளியிடப்படவில்லை.

தற்போதைய தகவலின்படி அவர் தான் குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் Krystalக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்