அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு குடியுரிமை வழங்கிய டிரம்ப்! வெள்ளை மாளிகை வரலாற்றில் நடந்த நிகழ்வு

Report Print Santhan in அமெரிக்கா
122Shares

இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடந்தது.

இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் பங்கேற்றார்.. அதிபர் டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.

அவருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார். அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது, இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்