வடகொரியா அதிபர் குறித்து டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்! குறைத்து மதிப்பிட வேண்டாம் என எச்சரிக்கை

Report Print Santhan in அமெரிக்கா

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மர்மங்கள் அதிகம் நிறைந்த வடகொரியாவில் என்ன தான் நடக்கிறது என்பதை இதுவரை எதையும் உறுதியாக கூற முடியாது.

அந்தளவிற்கு அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் ரகசியமாக வைத்திருக்கிறார். தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் நாட்டை வைத்துள்ளார்.

அதிகாரத்தால் வடகொரியாவையே ஆட்டிப்படைத்து வரும் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து கடந்த சில மாதங்களாகவே சந்தேகத்தை கிளப்பும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில், கிம் ஜாங் உன் ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கிறார் எனவும் ஒருவேளை அவர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி, ஆட்சி அதிகாரங்களை தனது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியானது.

கிம் ஜாங் உன் குறித்து அந்நாட்டு அரசுத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் உன் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அதில் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்