30 நாட்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்- டிரம்ப்

Report Print Fathima Fathima in அமெரிக்கா

இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிலடெல்ஃபியாவில் பேசுகையில், கொரோனா தடுப்பு மருந்தை நெருங்கிவிட்டோம்.

முந்தைய அரசாக இருந்தால் தடுப்பு மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர பல ஆண்டுகாலம் எடுத்திருக்கும்.

ஆனால், தன்னுடைய அரசு இன்னும் சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது என தெரிவித்தார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்