17 வயது சிறுவன் போல ஏமாற்றி சிறுவர், சிறுமிகளை குறிவைத்த நபர் செய்த மோசமான செயல்! அம்பலமான பகீர் பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா
94Shares

அமெரிக்காவில் 22 வயது நபர் தன்னை 17 வயது சிறுவனாக ஓன்லைனில் காட்டி கொண்டு சிறார்களை குறிவைத்து செய்த மோசமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பிரின்ஸ்டன் ப்ளூம் (22). இவர் தன்னை 17 வயது சிறுவனாக ஓன்லைனில் காட்டி கொண்டு சிறுவர், சிறுமிகளிடம் மயக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதையடுத்து அவர்களை நேரில் வரவழைத்து தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அப்படி இந்தாண்டு ஜனவரி மாதம் 13 வயது சிறுமியை நேரில் வரவழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதே போன்ற விடயத்தை கடந்த மே மாதமும் அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில் பொலிசார் பிரின்ஸ்டனை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பிரின்ஸ்டனால் மேலும் பல சிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்