நள்ளிரவில் நியூயார்க்கை நடுங்க வைத்த பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல்: பொலிஸ் குவிப்பு

Report Print Basu in அமெரிக்கா
114Shares

அமெரிக்காவின் நியூயார்க்கில் நள்ளிரவில் பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோசெஸ்டர் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதகாவும், 2 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு முன்னர் தாக்குதல் தொடங்கியுள்ளது, குட்மேன் ஸ்ட்ரீட் மற்றும் பென்சில்வேனியா அவென்யூ அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த நியூயார்க் அவசர சேவை அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த சூழ்நிலை குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. தாக்குதல் நடந்த பகுதியை பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் பொலிஸ் வாகனங்கள் குவிந்துள்ளன.

சம்பவ இடத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் உட்பட குறைந்தது 12 பேர் சுடப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது அவர்களின் நிலைமைகள் பற்றிய பிற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

அதே சமயம் தாக்குதல் நடத்தியது ஒருவரா அல்லது குழுவா என்ற தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்