பிறப்புறுப்பு சிதைப்பு... உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பிரபல பெண்மணி: அம்பலமான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
679Shares

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பிரபல போக்கர் விளையாட்டு நட்சத்திரம் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

இந்த விவகாரத்தில் 60 வயதான ஜெஃப்ரி மோரிஸ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மிச்சிகன் மாகாணத்தில் போக்கர் விளையாட்டில் சிறந்து விளங்கியவர் 33 வயதான சூசி ஜாவோ.

இவரையே கடந்த ஜூலை 12 ஆம் திகதி உடல் கருகிய நிலையில் சடலமாக பொலிசார் மீட்டுள்ளனர்.

12 ஆம் திகதி மாலை சூசி ஜாவோ ஹொட்டல் ஒன்றில் 60 வயதான ஜெஃப்ரி மோரிஸ் என்பவரை சந்தித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த ஹொட்டலில் வைத்தே சூசி ஜாவோ பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்ததன் அடுத்த நாள் வாகனம் நிறுத்தம் ஒன்றில், சூசியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உடற்கூராய்வில் அவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதும், கொடூர பாலியல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதும் தெரிய வந்தது.

மட்டுமின்றி, அவரது பிறப்புறுப்பும் சிதைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மேலும் மருத்துவர்கள் வெளியிட்ட அறியிக்கையின்ப்படி, அவரது உடல் 90 சதவீதம் அளவுக்கு கருகியுள்ளது.

மட்டுமின்றி, தொடர்புடைய ஹொட்டல் அறையில் இருந்து ரத்தக்கறை படிந்த பேஸ்பால் மட்டை ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றே ஜெஃப்ரி மோரிஸ் இதுவரை சாதித்து வருகிறார்.

மட்டுமின்றி ஹொட்டலில் தம்மை சந்தித்துவிட்டு, அன்று மாலையே சூசி வெளியேறிவிட்டதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளில், சூசி வெளியேறியதாக எதுவும் பதிவாகவில்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜெஃப்ரி மோரிஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

போக்கர் விளையாட்டில் சிறந்து விளங்கிய சூசி ஜாவோ ஏன் கொல்லப்பட்டார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்