கொரோனா தடுப்பூசி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in அமெரிக்கா
1277Shares

உலகமே கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என எங்கியிருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது 2021 ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் போதுமான அளவு கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான மில்லியன் மருந்துகள் கிடைக்கும், மத்திய சுகாதார கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என்றார்.

குறுகிய காலத்தில் எங்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கிடைக்கும், நாங்கள் வைரஸை தோற்கடிப்போம் என்று டிரம்ப் கூறினார்.

அக்டோபரில் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார், இந்நிலையில் அதற்கு சாத்தியமில்லை என சில வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்