அமெரிக்காவில் துணை அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்த டிரம்ப்பின் மகன்!

Report Print Santhan in அமெரிக்கா

ஜனநாயகக் கட்சி சார்பாக துணை அதிபருக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை, டிரம்ப்பின் மகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி சார்பாக தீவிரப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகன் எரிக் ட்ரம்ப் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எரிக் ட்ரம்ப், நீங்கள் கமலா ஹாரிஸைப் பாருங்கள்.

அவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் சமூகத்திலிருந்து முற்றிலும் விலகி ஓடிவிட்டார். இதனை இங்குள்ள இந்திய சமூகத்தினர் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் பேசி வருவது அவர்களுக்கு எதிராகவே போய் முடியும், கமலா ஹாரிஸ் ஒருக்காலும் துணை அதிபராக முடியாது என்று டிரம்ப் முன்னரே விமர்சித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து டிரம்ப்மற்றும் மைக் பென்ஸ் ஆகிய இருவரும் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்