செங்குத்துப்பாறையின் மீது சடலமாக கிடந்த கர்ப்பிணி பெண்! வேறு பெண்ணுடன் தங்கியிருந்த முன்னாள் காதலன் கைது

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் காணாமல் போன கர்ப்பிணி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் முன்னாள் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பார்க்லேண்ட்டை சேர்ந்தவர் Kassandra Cantrell. கர்ப்பமாக இருந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதியில் இருந்து காணாமல் போனார்.

இந்த நிலையில் செங்குத்துப்பாறையின் மேல் பகுதியில் Kassandra Cantrellவின் சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அவரை கொலை செய்ததாக முன்னாள் காதலனை கைது செய்துள்ளனர்.

அந்த நபர் தனது காதலியுடன் வீட்டில் இருந்த போது அங்கு சென்ற பொலிசார் அவரை பிடித்தனர்.

முதலில் Kassandra Cantrellவை தான் பார்த்தே ஆண்டுக்கணக்கில் ஆகிவிட்டது என அவர் கூறினார்.

ஆனால் Kassandra Cantrell காணாமல் போன பின்னர் அவர் காரில் இருந்து முன்னாள் காதல் இறங்கி சென்றதை சிசிடிவி கமெரா காட்சிகள் மூலம் பொலிசார் கண்டுபிடித்த நிலையிலேயே அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்