114 ஆண்டுகளில் முதன் முறையாக... அந்த ஒருநாள் பொலிஸ் கட்டுப்பாட்டில்: நியூயார்க் நிர்வாகம் முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கம் ஆள் ஆரவாரம் ஏதுமின்றி புத்தாண்டை கொண்டாட இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் அறிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த முக்கிய முடிவை முன்னெடுத்துள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 31 இரவு பொதுவாக மிட் டவுன் மன்ஹாட்டனின் தெருக்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் குறைவில்லாத மக்கள் கூட்டம் அலைமோதும்.

மட்டுமின்றி இந்த டைம்ஸ் சதுக்க புத்தாண்டு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டுகளிப்பதுண்டு.

ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நியூயார்க் நகர பொலிசாரின் முழுகட்டுப்பாட்டின் கீழ் டைம்ஸ் சதுக்கம் கொண்டுவரப்படும்.

மேலும், விழா நிகழ்வுகளை செயலிகள் மற்றும் இணையம் மூலம் ஒளிபரப்ப நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி மிகக் குறைவான எண்ணிக்கையிலான கூட்டத்தை டைம்ஸ் சதுக்கத்தில் அனுமதிக்கவும், அதுவும் ஒளிபரப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களை மட்டும் அனுமதிக்க இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் கூட்டம் ஏதுமின்றி டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது 114 ஆண்டுகளில் முதன்முறை என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்