பரிதாபப்பட்டு பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு பாலூட்டிய பெண்: பின்னர் தெரிய வந்த அதிரவைத்த செய்தி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், குழந்தை பசியால் தவிப்பதாகவும் பக்கத்து வீட்டுக்காரர் கூறியதால் பரிதாபப்பட்டு அந்த குழந்தைக்கு தன் குழந்தையுடன் சேர்த்து பாலூட்டியிருக்கிறார் ஒரு பெண்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தன் பக்கத்து வீட்டிற்கு ஒரு ஐந்து மாத குழந்தையுடன் ஒரு ஆண் மட்டும் வந்து குடியேறியதைக் கண்டு அவருக்கு உதவியிருக்கிறார்.

குழந்தையுடன் அவர் தனியாக கஷ்டப்படுவார் என்று எண்ணி, வீட்டில் செட்டில் ஆவதற்கு அந்த பெண் தன்னாலான உதவிகளை செய்திருக்கிறார்.

அந்த குழந்தையின் தாய் எங்கே என்று கேட்டதற்கு, அவள் எங்களோடு இல்லை என்று கூறியிருக்கிறார் அந்த பக்கத்து வீட்டுக்காரர்.

இந்த பெண்ணுக்கு ஒரு இரண்டு வயது பெண் குழந்தை இருக்கிறது. அது இன்னும் தாய்ப்பால் குடிப்பதை அறிந்துகொண்ட அந்த பக்கத்து வீட்டுக்காரர், தனது குழந்தைக்கும் பாலூட்ட முடியுமா என அந்த பெண்ணிடம் கேட்க, பரிதாபப்பட்டு ஒப்புக்கொண்டிருக்கிறார் அந்த பெண்.

இப்படியே குழந்தைக்கு பாலூட்டுவதில் தொடங்கிய பழக்கம், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ஒரே வீட்டில் தங்கத் தொடங்கியுள்ளனர். அப்படியிருகும்போது, திடீரென ஒரு நாள் அந்த குழந்தையின் தாய் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்.

என் குழந்தைக்கு நீ எப்படி தாய்ப்பால் கொடுக்கலாம், எனக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள உறவை நீ உடைக்க முயல்கிறாய் என பயங்கரமாக சண்டையிட்டுள்ளார் அந்த பெண்.

அப்போதுதான், அந்த குடும்பத்திற்கும், அந்த குழந்தையின் தாய்க்கும் இன்னமும் தொடர்பு இருப்பதையும், அந்த ஆண் இந்த உண்மைகளை தன்னிடம் மறைத்துவிட்டதையும் அறிந்து அதிர்ந்து போயுள்ளார் அவர்.

இந்த விடயத்தை அந்த அமெரிக்கப் பெண் சமூக ஊடகம் ஒன்றில் விவரிக்க, அதைப் படித்தவர்கள் சிலர், அந்த பெண் சண்டை போட்டால் அவளது கணவனிடம்தானே சண்டை போடவேண்டும், உன்னிடம் ஏன் சண்டை போடுகிறாள் என அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் சிலர், நீங்கள் பால் கொடுப்பதற்கு முன் குழந்தையின் பெற்றோர் இருவரிடமும் அனுமதி பெற்றிருக்கவேண்டும், நீங்கள் செய்தது தவறு என்று கூறியுள்ளார்கள்.

பரிதாபப்பட்டு பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு பால் கொடுக்கப்போக, இப்படி ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டோமே என விழி பிதுங்கி நிற்கிறார் அந்த அமெரிக்கப்பெண்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்