கருப்பினத்தவர்கள் உச்சி குளிரும் வகையில் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள சலுகை அறிவிப்புகள்! காரணம் என்ன?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்க தேர்தலில் கருப்பினத்தவரின் ஓட்டுக்களை ஈர்க்கும் வகையில், கடன் வசதி உட்பட பல்வேறு சலுகைகளை அளிப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 3ஆம் திகதி நடக்க உள்ளது. பல்வேறு கருத்துக் கணிப்புகளின்படி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

தேர்தலுக்கு, 40 நாட்களே உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும், அதிபர் டொனால்டு டிரம்ப், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், 'டிரம்புக்கு கருப்பினத்தோரின் குரல்' என்ற பெயரில், நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில், டிரம்ப் பங்கேற்றார்.

அப்போது, கருப்பின மக்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 'கருப்பின மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். உடனடி கடன் உதவி வழங்கப்படும். அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட, ஜூன், 10ம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படும்' என, பல அறிவிப்புகளை, டிரம்ப் வெளியிட்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களில், கருப்பினத்தைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் அவர் பேசினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்