நீண்ட 10 ஆண்டுகள்... மொத்தமாக ஏமாற்றி வந்த டொனால்டு டிரம்ப்: தேர்தல் வேளையில் கிழிந்த முகத்திரை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தாம் தெரிவு செய்யப்படலாம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துவரும் டிரம்புக்கு பேரிடியாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனால் வழக்கம் போன்று குறித்த தகவலை போலியான செய்தி என்றே டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இதுவரையான அமெரிக்க ஜனாதிபதிகளில் டிரம்ப் மட்டுமே வரி செலுத்தியதற்கான தரவுகளை பொதுமக்கள் மத்தியில் வெளியிட மறுப்பு தெரிவித்து வந்தவர்.

தாம் ஜனாதிபதியாக தெரிவான 2016 ஆம் ஆண்டு கோடீஸ்வரரான டொனால்டு டிரம்ப் வரியாக செலுத்தியுள்ள மொத்த தொகை 750 டொலர் மட்டுமே.

மேலும் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலும், வருமான வரியாக அரசுக்கு 750 டொலர் மட்டுமே செலுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, கடந்த 15 ஆண்டுகளில் டொனால்டு டிரம்ப் மொத்தமாக 10 ஆண்டுகள் அரசுக்கு எந்த வகையான வரியும் செலுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் குறித்த குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியுள்ள டொனால்டு டிரம்ப், தாம் தவறாமல் வரி செலுத்தும் உண்மையான அமெரிக்க குடிமகன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை தாம் வரி செலுத்தியதற்கான தரவுகளை பொதுவெளியில் வெளியிட்டதே இல்லை.

2016 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், அப்போதைய எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுடன் முன்னெடுக்கப்பட்ட விவாதத்தில்,

டிரம்ப் இதுவரை தாம் வரி செலுத்தியதற்கான எந்த தரவுகளையும் வெளியிட்டதில்லை என ஹிலாரி விமர்சனம் முன்வைத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த டொனால்டு டிரம்ப், அரசுக்கு வருமான வரி செலுத்தாதது எனது கெட்டிக்காரத்தனம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்