சிகை அலங்காரத்திற்கு மட்டும் ஓராண்டில் டிரம்ப் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
358Shares

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்ற தகவல் அம்பலமான நிலையில், அவர் தமது சிகை அலங்காரத்திற்கு மட்டும் செலவிட்ட தொகை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோடீஸ்வரரான டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் முன்னர் தொடர்ந்து 15 ஆண்டுகளில் அரசுக்கு வரி ஏதும் செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது.

இதில் 5 ஆண்டுகளில் அவர் மிகக் குறைவான வரியே செலுத்தியுள்ளார். அதாவது 2017 ஆம் ஆண்டு வருமான வரியாக வெறும் 750 டொலர் மட்டுமே செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் தோன்ற, தமது சிகை அலங்காரத்திற்காக மட்டும் ஓராண்டில் 55,000 பவுண்டுகள் செலவிட்டதாக அரசுக்கு தரவுகளாக சமர்ப்பித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், ஜனாதிபதி டிரம்ப் தொடர்பான இந்த அதிர்ச்சி தகவல்கள் அவரது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றே கருதப்படுகிறது.

மேலும், வங்கிகளில் இருந்து கடன்பெற்றிருந்த தொகையில் சுமார் 421 மில்லியன் டொலர் தொகையை அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் திருப்பி செலுத்தவேண்டி உள்ளது.

டிரம்பின் கடனில் பெரும்பாலானவை புளோரிடாவில் உள்ள அவரது கோல்ஃப் ரிசார்ட் (125 மில்லியன் டொலர்) மற்றும் வாஷிங்டனில் உள்ள அவரது ஹொட்டல் (160 மில்லியன் டொலர்) ஆகியவற்றிலிருந்து வந்தவை என கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்