கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் உடல்நிலை மோசமானால் என்ன நடக்கும் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஒரு வேளை டிரம்ப் தனது பொறுப்பினை தொடர இயலாத அளவிற்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் அதிபர் மோசமான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் அரசியலமைப்பு சட்டம் 25-ன் படி தனது பொறுப்பினை துணை அதிபரிடம் அளிப்பதற்கு வழிவகுக்கின்றது.
ஆனால், பொறுப்பினை கைமாற்றும் நிலைமையில் அவர் இல்லையெனில் அமைச்சரவையும் துணை அதிபரும் அவருடைய உடல் நிலையை விவரித்து அவரால் தொடர்ந்து அரசு பணிகளில் ஈடுபட முடியாது என முடிவெடுத்து அறிவிக்க முடியும்.
இதன் பின்னர் துணை அதிபராக தற்போது உள்ள மைக் பென்ஸ் இந்த அதிபர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வர். பின்னர் உடல்நலக்குறைவிலிருந்து மீண்ட பின்னர் மீண்டும் அதிபர் தனது பொறுப்பினை பெற்றுக்கொள்வார்.
ஒருவேளை துனை அதிபர் திறமையற்றவராக இருப்பாரெனில், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரான நான்சி பெலோசி அதிபராக பொறுப்பினை ஜனாதிபதி வாரிசு சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்வார்.
ஒரு வேளை இவரும் இந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அதிபரின் சார்ந்துள்ள கட்சியின் செனட்டரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
ஆனால் இம்மாதிரியான நடைமுறைகள் பெரும் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் இம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதா?
அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் இரண்டு முறை நடைபெற்றுள்ளது. 1985-ல் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகச் சென்ற போது துணை அதபராக இருந்த ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்.
அதே போல, 2002 மற்றும் 2007 ஆண்களில் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவு காரணமாகத் துணை அதிபரிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்.