அமெரிக்க அதிபர் தேர்தலில் டிர்ம்பை வீழ்த்துவதற்கு ஒன்றினைந்த ஆயிரக்கணக்கான பெண்கள்! என்ன காரணம் தெரியுமா?

Report Print Karthi in அமெரிக்கா

உலக அரசியலை நிர்மாணிக்கும் சக்தியாக இருந்து வந்த அமெரிக்காவில் தற்போது பல அரசியல் போராட்டங்கள் அந்நாட்டின் அரசுக்கு எதிராக தீவிரமடைந்துள்ளன.

நவம்பர் 3-ம் திகதி தேர்தலை சந்திக்க உள்ள அமெரிக்காவில், அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரூம் பேடர் கின்ஸ்பர்க் மறைவினால் ஏற்பட்டுள்ள காலியிடத்தில் நீதிபதி அமிகோனி பாரெட் நியமிக்க, அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.

டிரம்பின் இந்த முடிவினை எதிர்த்தும், எதிர் வரும் தேர்தலில் டிரம்பை வீழ்த்த கோரியும் ஆயிரக்கணக்கான பெண்கள் அமெரிக்க தலைநகர் வாசிங்டன், டிசியிலும் இதர பகுதிகளிலும் பேரணியை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கையும் ஒன்பது நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து விசாரிப்பார்கள். உலகின் பிற நாடுகளில் உள்ளதை போன்று அவர்களுக்குப் பணி ஓய்வு கிடையாது.

இறக்கும் வரை அவர்கள் பணியாற்றலாம்.

இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கறுப்பர்கள், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க், தனது 87வது வயதில் புற்றுநோயால் கடந்த 19ம் தேதி காலமானார். இவர் 27 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்துள்ளார்.

இவர் இறந்ததை அடுத்து காலியாக உள்ள பணியிடத்துக்கு நீதிபதி அமிகோனி பாரெட் பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரைக்க உள்ளார். 48 வயதாகும் பாரெட், தற்போது 7வது சர்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். இப்பதவிக்கும் அவருடைய பெயரை அதிபர் டிரம்ப்தான் கடந்த 2017ல் பரிந்துரை செய்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்