25,000 டொலர் பரிசை வென்ற 14 வயது இந்திய வம்சாவளி சிறுமி! எப்படி தெரியுமா?

Report Print Karthi in அமெரிக்கா

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க சாத்தியமான மருந்து குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக இந்திய வம்சாவளியான 14 வயது அமெரிக்க சிறுமி 25,000 டொலார் பரிசினை வென்றுள்ளார்.

3 எம் இளம் விஞ்ஞானி சவாலில் பங்கேற்றிருந்த அனிகா செப்ரோலு என்கிற இந்த சிறுமி கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கப்பட்டு செயல்படுவதைத் தடுக்கக்கூடிய ஒரு மூலக்கூற்றை மாணவி உருவாக்கியுள்ளார்.

அனிகா முன்னதாக கொரோனா வைரஸில் கவனம் செலுத்தவில்லை. ஆண்டு தொடங்கியபோது, பருவகால காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளில் அவர் பணியாற்றி வந்தார்.

Facebook by 3m

இந்நிலையில் தொற்றுநோய் தாக்கியபோது அவளுடைய திட்டங்கள் மாறின. கொரோனா வைரஸிற்கான சாத்தியமான மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக, 14 வயதானவர் SARS-CoV-2 வைரஸுடன் மூலக்கூறு எவ்வாறு, எங்கு பிணைக்கப்படும் என்பதை அடையாளம் காண பல கணினி நிரல்களைப் பயன்படுத்தினார்.

COVID-19 தொற்றுநோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்துடன் தேர்ந்தெடுக்கும் ஒரு மூலக்கூறைக் கண்டுபிடிக்க மருந்து கண்டுபிடிப்பிற்கு அனிகா இன்-சிலிகோ முறையைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி என்கிற அங்கீகாரத்தினை பெற்றுள்ளார்.

தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அனிகா, தான் ஒருநாள் நிச்சயம் ஒரு பேராசிரியராக ஆவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்