அமெரிக்காவில் டிரம்ப் டவரில் 13 மணி நேரம் தொங்கியபடி மிரட்டல் விடுத்த இளைஞர்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

ஜனாதிபதி டிரம்புடன் உடனையே பேச வேண்டும் என கோரிக்கை வைத்து, இளைஞர் ஒருவர் டிரம்ப் டவரில் 13 மணி நேரம் தொங்கிய சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.

கறுப்பின ஆதரவு இயக்கத்தை சேர்ந்தவர் என கூறும் அந்த இளைஞரை சுமார் 13 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகொ நகரில் அமைந்துள்ள டிரம்ப் டவர் எனப்படும் கட்டிடத்தின் 16-வது மாடியில் இருந்தே அவர் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஊடகங்களிடம் பேச வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்து வந்தார்.

மட்டுமின்றி, தேவை எனில் உயிரை மாய்த்துக் கொள்ளவும் தாம் தயாராக இருப்பதாக அந்த 20 வயது இளைஞர் அறிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொலிசார், அந்த இளைஞருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒருவரை ஏற்பாடு செய்தது.

ஆனால் சுமார் 13 மணி நேரத்திற்கு பின்னர், அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததுடன், டிரம்ப் டவரில் இருந்து அந்த இளைஞரை மீட்டு, பொலிசார் பின்னர் கைது செய்தனர்.

ஆனால், ஜனாதிபதி டிரம்புடன் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பில் அந்த இளைஞர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்