விமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாப மரணம்! உயிரிழந்தது எப்படி? வெளியான முழுவிபரம்

Report Print Santhan in அமெரிக்கா
352Shares

அமெரிக்காவில் விமானத்தில் 30 வயது பெண் ஒருவர் மூச்சுவிட முடியாமல் இறந்த நிலையில், அவர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஜுலை மாதம், அமெரிக்காவின் Arizona-வில் இருந்து Texas-க்கு விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயாராக ஒடு பாதையில் காத்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்த விமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண், மூச்சுவிடுவதில் சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. அவருக்கு அடிப்படை அளவில் உடல்நலப்பிரச்சனைகள் இருந்துள்ளது.

இதையடுத்து, அவர் உயிரிழந்த நிலையில், அவர் கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போது, அவரது மரணம் கொரோனா தொடர்பானது என்பதை Dallas கவுண்டி நீதிபதி Clay Jenkins உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த பெண் Texas-ன் Garland-ல் வசித்து வந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்த பெண்ணுக்கு வைரஸ் இருப்பது தெரியுமா, இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த மரணத்தின் மூலம் கொரோனாவிற்கு வயது வரம்பு எல்லாம் கணக்கில்லை, யாரை வேண்டும் என்றாலும் தாக்கலாம் என்பதை நீதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண், எந்த விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்