ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்த நபர்: அவர் யார் என்ற உண்மை தெரிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Balamanuvelan in அமெரிக்கா
421Shares

கடந்த மூன்று வாரங்களில் ஐந்து வங்கிகளில் ஒருவர் கொள்ளையடித்த நிலையில், ஆறாவது வங்கிக்கு செல்லும்போது சிக்கினார்.

விசாரணையில் அவர் சட்டத்தரணியாக பணியாற்றிய ஒருவர் என்பது தெரிந்தபோது பொலிசாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டது.

தெற்கு ப்ளோரிடா பகுதியில் கடந்த மூன்று வாரங்களில் ஐந்து வங்கிகளில் மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

பொலிசார் CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் அவரைத் தேடி வந்த நிலையில், Coral Gables என்ற நகரில் உள்ள வங்கி ஒன்றிற்குள் நுழைய முயன்ற ஒருவரைக் கண்ட பொலிசார் ஒருவர், அவர் அந்த கொள்ளையனைப்போலவே இருந்ததால் உஷாரானார்.

பொலிசார் அவரை கைது செய்து விசாரிக்கும்போது, அவர் ஒரு சட்டத்தரணி என்பது தெரியவரவே அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவரது பெயர் Aaron Honaker (41), டியூக் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துவிட்டு, 2008இல் சட்டத்தரணியாக பணி செய்யத்துவங்கியுள்ளார். இன்னமும் அவரது பெயர் ப்ளோரிடா பார் கவுன்சிலில் ஒரு சட்டத்தரணியாக இடம்பெற்றுள்ளது.

ஆனால், அவருடன் பணியாற்றிய ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் Aaron திடீரென மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அப்படி மாயமான Aaronதான் தற்போது ஒரு கொள்ளையனாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு சட்டத்தரணி எதனால் கொள்ளையனானார் என்பது குறித்த விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்