அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதா தெலுங்கு? உண்மை அலசல்

Report Print Karthi in அமெரிக்கா
385Shares

அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அதிபர் தேர்தலையொட்டி தெலுங்கு மொழி அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் திடீரென பரவ தொடங்கியுள்ளது.

"அமெரிக்காவில் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தெலுங்கு மொழி அமெரிக்க வாக்குப் பெட்டியில் இடம் பெறுகிறது" என்கிற தலைப்பின் கீழ் "தி ஹான்ஸ் இந்தியா" எழுதிய ஒரு கட்டுரையின் அடிப்படையில் பல பேஸ்புக் பயனர்கள் இந்த கோரிக்கையை முன்வைக்கை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் அமெரிக்கா எந்த மொழியையும் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கவில்லை என்றும் ஆங்கிலம் கூட இல்லை உத்தியயோகபூர்வ மொழியல்ல என்றும் இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. ஆனால், தெலுங்கு அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய மொழிகளில் ஒன்றாக உள்ளதையும் இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா, டெக்சாஸ், இல்லினாய்ஸ் மற்றும் கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் தெலுங்கு பேசும் மக்கள் பெருமளவில் இருப்பதால் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதிகள் அடங்கிய பிரசுரங்கள் தெலுங்கில் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கக்கூடும்.

இதனை அடிப்படையாக கொண்டு தெலுங்கு உத்தியோபூர்வ மொழி என வதந்திகள் பரவுவது அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த செய்திகள் மிக வேகமாக பரவிவருகின்றது. ஆனால் இது உண்மையல்ல என்பதை இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்