குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் சடலம்... பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நபர்: அம்பலமான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா
266Shares

அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்து பிரிட்ஜில் பதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயது செலினா ஆன் பிராட்லியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான செலினா தற்போது மூன்றாவது குழந்தைக்கு விரைவில் தாயாகவிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணாமல் போன நிலையில் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் செலினாவின் முன்னாள் காதலன் வில்லியம் ஜேம்ஸ் தமது நண்பரிடம் தொலைபேசியில் உரையாடவே, நடந்தவற்றை உளறியுள்ளார்.

உடனடியாக அந்த நண்பர் பொலிசாரை தொடர்பு கொண்டு தாம் கேட்ட சம்பவத்தை ஒப்புவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கள் கிழமை செலினாவின் முன்னாள் காதலனின் வீட்டில் தேடியபோது, செலினா கழுத்து மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் சமையலறையில் இருந்த பிரிட்ஜில் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்படிருந்தார்.

அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரது முன்னாள் காதலன் வில்லியம் ஜேம்ஸை செவ்வாய் கிழமை கைது செய்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை செலினா கொலைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. ஆனால், வில்லியம் ஜேம்ஸ் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்