காற்று மாசு குறித்து இந்தியாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப்!

Report Print Karthi in அமெரிக்கா
89Shares

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை காற்று மாசால் பாதிக்கப்பட்ட இழிந்த நாடு என கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் திகதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலையொட்டி குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இருவருக்கும் சமீபத்தில் நடந்த விவாதத்தில் அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது குறித்து பிடன், டிரம்ப் மீது குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

இதனை மறுத்து பேசிய டிரம்ப், சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் காற்று மாசால் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த நாடுகளை விட அமெரிக்கா மேம்பட்ட இடத்தில்தான் உள்ளது என்றும் எனவே பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் தேவையில்லாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி விவாதங்களில் இந்தியா குறித்து இவ்வாறான கருத்துக்களை டிரம்ப் பேசுவது இதுவே முதன்முறையல்ல. முன்னதாக கொரோனா தொற்று பரவல் குறித்து டிரம்ப் இந்தியாவை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments