பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலி: அமெரிக்காவை மொத்தமாக உலுக்கும் ஆய்வறிக்கை வெளியானது

Report Print Arbin Arbin in அமெரிக்கா
82Shares

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு மதிப்பீடு ஒன்ற சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.

இதுவரை 2.21 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், அமெரிக்க மக்களில் பலர் கொரோனா நெருக்கடியை கையாள்வதில் டிரம்பிற்கு பதிலாக ஜோ பைடன் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், குறைந்த அளவிலான கொரோனா திறன் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளில்லா நிலையில்,

குளிர்காலத்தில் பொது சுகாதாரத்திற்கு சவாலாக தொடரும் கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டும்.

பெரிய அளவில் பாதிப்புகள் சரிவை நோக்கிச் சென்றாலும், குளிர்காலத்தில் உயரும் நிலை ஏற்படும்.

தொற்று விகிதம் மற்றும் மரணங்கள் ஆகியவற்றின் உயர்வு காணப்படும் சூழலில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதில் அடிப்படை இல்லை.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.

ஆனால், ஒவ்வொருவரும் மாஸ்க் கட்டாயம் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களைப் பாதுகாக்கலாம் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்