வீட்டின் மீது பாய்ந்த விமானம்: பற்றி எரிந்த பகுதி! அமெரிக்காவில் பயங்கர விபத்து

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலபாமா மாநிலத்தின் பால்ட்வின் கவுண்டியிலே இந்த விபத்து நடந்துள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் வீட்டின் மீது மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், விமானிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பயிற்சியின் போது இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எனினும், அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பால்ட்வின் கவுண்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் அப்பகுதியிலிருந்த ஒரு வீடு உட்பட பல வாகனங்கள் சேதமடைந்துள்ளது.

விபத்து குறித்து கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி சில வாரங்களுக்கு முன்பு சாலி சூறாவளியால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்