அதிகாலையில் கைது செய்யப்பட்ட இளைஞன்! இளம்பெண்ணை கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்தது அம்பலம்

Report Print Raju Raju in அமெரிக்கா
163Shares

அமெரிக்காவில் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Maryland-ஐ சேர்ந்த Saul Alberto Garay-Amaya என்ற இளைஞனை பொலிசார் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கைது செய்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நீண்ட விசாரணைக்கு பின்னரே Saul Alberto Garay-Amaya-ஐ கைது செய்துள்ளோம்.

அவர் கடந்த மாதம் இளம்பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்திருக்கிறார்.

அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதால் மேலதிக தகவல்களை இப்போது வெளியிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்