தன் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு பிள்ளைகளிடம் மன்னிப்புக்கேட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அமெரிக்கர் ஒருவர்.
Houstonஇல் வாழும் Trent Paschal (48), அவரது மனைவியான Savannah (30)ஐ சுட்டுக்கொலை செய்தார்.
பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய Trent, தன் பிள்ளைகளுக்கு தன்னிலை விளக்கமளிக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், தன் மனைவி தனக்கு நீண்ட நாட்களாக துரோகம் செய்துவந்ததாகவும், தான் அவளை எச்சரித்தும் அவள் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மற்ற ஆண்களுடன் அவள் பேசும் உரையாடல்கள் தன்னிடம் உள்ளதாக கூறும் அவர், ஒரு இளைஞனிடம் தாங்கள் உல்லாசமாக இருக்கும் நாளுக்காக காத்திருப்பதாக Savannah கூறியதை தான் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கள் இருவருக்கும் 18 வயது வித்தியாசம் என்றும், Savannah மிகவும் இளைய வயதுடையவள் என்றும், அதனால் அவள் தனக்கு துரோகம் செய்துவிடுவாள் என தான் ஏற்கனவே அஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் ஏன் இப்படி செய்தேன் என்பதை தன் மகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோவை தன வெளியிட்டதாக கூறியுள்ள Trent, தான் தன் மகளை மிகவும் நேசிப்பதாக கூறுகிறார். அவர் இந்த வீடியோவை பதிவு செய்த சிறிது நேரத்தில் பொலிசார் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள்.
உடனே Trent அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார், பதிலுக்கு பொலிசாரும் சுட்டுள்ளனர். சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்குப்பின், காயமடைந்த Trentஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.