வாக்குப் பதிவு செய்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்: யாருக்கு வாக்களித்தார் தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா
394Shares

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, இன்று புளோரிடா மாகாணத்தில் வாக்குசாவடிக்கு நேரிடையாக சென்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வாக்களித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ம் திகதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

தேர்தல் 3ம் திகதிதான் என்றபோதிலும், வாக்குப் பதிவு நாளன்று நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில், முன்கூட்டியே வாக்களிக்கவும் வசதி நடைமுறையில் உள்ளது.

அதன்படி புளோரிடா மாகாணத்தில் தமது குடியிருப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி டிரம்ப் இன்று தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.

வாக்களித்து விட்டு வெளியே வந்த டொனால்டு டிரம்ப் நிருபர்களிடம், நான் டிரம்ப் என்ற ஒருவருக்கு வாக்களித்தேன் என்று சிறு புன்னகையுடன் தெரிவித்தார்.

டிரம்புடன் சேர்த்து, கிட்டத்தட்ட 5.5 கோடி அமெரிக்கர்கள் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலையொட்டி வாக்களித்துள்ளனர்.

மேலும், மாஸ்க் அணிவதை கடுமையாக விமர்சனம் செய்துவரும் ஜனாதிபதி டிரம்ப், இன்று வாக்களிக்க வந்திருந்தபோது தனது முகத்தில் மாஸ்க் அணிந்து இருந்தார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அஞ்சலில் வாக்களிப்பதை விடவும், இப்படி நேரில் வந்து வாக்களியுங்கள். இது ரொம்பவே பாதுகாப்பானது.

இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி அனைத்தும் நடந்து வருகிறது.

நீங்கள் நேரில் வராமல் வாக்கு செலுத்தினால் இந்த அளவுக்கு அது பாதுகாப்பாக இருக்குமா என்பதை சொல்ல முடியாது என அவர் தெரிவித்தார்.

அஞ்சல் மூலமாக வாக்குகளை பதிவு செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் டிரம்ப். இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில்தான் நேரடியாக டிரம்ப், வாக்குச்சாவடிக்கு வந்து அனைவரும் நேரில் வாக்களிக்க தூண்டி உள்ளார் என்கிறார்கள், அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள்.

முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, அஞ்சல் மூலமாக தமது வாக்குரிமையை பதிவு செய்ததை காணொளியாக வெளியிட்டு, பொதுமக்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்