Zoom வகுப்பினால் 12 வயது மாணவனுக்கு நேர்ந்த கதி

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா
2Shares

கடந்த சில மாதங்களாக Zoom அப்பிளிக்கேஷன் ஊடான ஒன்லைன் வகுப்புக்கள் உலகின் பல நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.

இந்த வகுப்புக்களில் பலர் ஆர்வம் காட்டுகின்றபோதிலும் சில மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு வகுப்பினை தவிர்த்த 12 வயது மாணவனை சிறை அனுப்பவுள்ளதாக மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு பாடசாலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் ஒரே நாளில் 3 வகுப்புக்களை தவறவிட்டுள்ளான்.

ஒவ்வொன்னும் 30 நிமிடங்கள் கொண்ட வகுப்புக்கள் ஆகும்.

இந்த வகுப்புக்களை தவற விட்டமைக்காகவே பாடசாலை அதிபரினால் மேற்கண்ட அச்சுறுத்தல் அடங்கிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறைப்படுத்தப்படவுள்ள நேரத்தினையும் அக் கடிதத்தில் பாடசாலை அதிபர் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்