தெருவில் இறந்து கிடந்த பெண்! காப்பாற்றாமல் 35 வயது நபர் செய்த மோசமான செயல்: சிசிடிவில் பதிவான காட்சி

Report Print Santhan in அமெரிக்கா
1928Shares

அமெரிக்காவில் 64 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென்று கீழே விழுந்து மயக்கமடைந்த நிலையில், அவரைக் காப்பாற்றாமல் நபர் செய்த செயலின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் St. Louis-ல் இருக்கும் பகுதியில், சுமார் 64 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவர் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துவிடவே, இதைக் கண்ட அருகில் இருந்த நபர் உடனே அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல், அவர் அருகில் வந்து, அவரிடம் இருந்த போனை திருடிச் சென்ற காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள செய்தியில், குறித்த பெண் தெருவில் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு, அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் s Jacquelyn “Jackie” Olden எனவும் திருட்டு செயலில் ஈடுபட்ட நபரின் பெயர் Brian Davenport(35) என்பதும் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து, பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்