முதலை தனது நண்பன் என்று கூறி அதனுடன் நீந்திக்கொண்டிருந்தார் ஒருவர். ப்ளோரிடாவைச் சேர்ந்த John Braje, விலங்குகள் மீது அதீத ஆர்வம் கொண்டவர்.
ஏரி ஒன்றில் முதலையுடன் நீந்திக்கொண்டிருந்த அவர், அந்த முதலையின் பெயர் Elvis என்றும், அது தன் நண்பன் என்றும் கூறிக்கொண்டிருந்தார்.
ஆனால், திடீரென அந்த முதலை Johnஉடைய தோளைக் கவ்வ முயல, அதிர்ந்தார் அவர். உடனடியாக பதறியடித்து தண்ணீரிலிருந்து வெளியேறினார் அவர்.
என்றாலும், அது தன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை என்றும், சும்மா தன்னை வம்புக்கிழுப்பதற்காகத்தான் அது செய்தது என்றும், விரைவில் மீண்டும் அதனுடன் தான் நீந்துவேன் என்றும் கூறியுள்ளார் John.
ஆனால், அவரது நண்பர்களோ, அது அவரைக் கொன்றிருக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்கள்.
இருந்தாலும் அது நினைத்திருந்தால் தன்னைக் கடித்திருக்க முடியும் என்றும், ஆனால் அது அப்படி செய்யவில்லை என்றும், மற்ற மனிதர்கள் தன்னுடன் இருப்பதால் தான் பெரியவன் என்று காட்டிக்கொள்வதற்காகத்தான் அது அப்படி செய்தது என்றும் கூறியுள்ளார் John.