கனடாவில் வாழ்ந்த கணவருக்கு தெரியாமல் புது காதலரை தேடிக்கொண்ட மனைவி: உண்மை தெரியவந்தபோது?

Report Print Balamanuvelan in அமெரிக்கா
10734Shares

கனடாவில் வாழ்ந்துவரும் தன் கணவருக்குத் தெரியாமல் அமெரிக்காவில் புதிதாக ஒரு காதலரைத் தெடிக்கொண்டார் ஒரு பெண்.

நியூயார்க்கில் வங்கி ஒன்றில் பணிபுரிந்த Min Ai (40) என்ற இளம்பெண், கனடாவில் வாழ்ந்துவரும் தன் கணவரான Xin Yu (46)ஐ விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளார். அத்துடன் யாருக்கும் தெரியாமல் தன்னுடன் பணியாற்றும் ஒருவரை காதலித்துவந்துள்ளார் Min Ai.

ஆனால், இது எப்படி Xin Yuக்கு தெரிந்ததோ தெரியவில்லை, அவர் எப்போது அமெரிக்காவுக்கு வந்தார் ன்பதும் தெரியவில்லை.

Min Ai காலையில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்படும்போது அவரை வழிமறித்த Xin Yu, அவரிடம் ஏதோ கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சட்டென கத்தி ஒன்றை உருவிய Xin Yu, Min Aiயை கத்தியால் குத்திவிட்டு, தன்னிடமிருந்த துப்பாக்கியால் அவரது தலை மற்றும் உடலில் சுட்டுள்ளார். அதில், Min Ai சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

பின்னர் துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளார் Xin Yu. ஆனால் அவரது உயிர் பிரியவில்லை.

பட்டப்பகலில் நடு சாலையில் இந்த சம்பவம் நடக்க, இன்னமும் Xin Yuக்கு உயிர் இருப்பதையும், அவர் கையில் துப்பாக்கி இருப்பதையும் கண்ட ஒரு பெண் ஓடிச்சென்று அந்த துப்பாக்கியை பறித்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Xin Yu, 15 நிமிடங்களுக்குப் பின் உயிரிழந்துள்ளார்.

Xin Yu மனைவியிடம் வாக்குவாதம் செய்யும்போது அவரிடம் தமபதியரின் திருமணச் சான்றிதழ் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்