அமெரிக்காவில் தொடரும் கறுப்பினத்தவர் உயிரிழப்புகள்! காவல்துறையை எதிர்த்து மக்கள் போராட்டம்

Report Print Karthi in அமெரிக்கா
118Shares

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கறுப்பின மக்களின் உயிரிழப்புகளை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பிலடெல்பியா பகுதியில் சமீபத்தில் 27 வயது மதிக்கத்தக்க கறுப்பின இளைஞர் ஒருவர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த பகுதியில் மக்கள் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்ட ஊர்வலங்களில் வன்முறைகள் வெடிக்கத் தொடங்கி வணிக வாளாகங்கள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் தந்தை வால்டர் வாலஸ் மகன் மற்றும் குடும்பத்தினருக்கான மரியாதைக்கு புறம்பாக நடைபெற்று வரும் “வன்முறையை நிறுத்த வேண்டும்” என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.

மகனின் உயிரிழப்பினை காரணமாக வைத்து நடைபெற்று வரும் இந்த வன்முறைகளும், சூறையாடல்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் மன்னிக்கவும் முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அதே போல இந்த உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் தொடங்கிய ஜார்ஜ் பிலாய்ட் மரணத்தினையொட்டிய போராட்டங்களை போல இந்த உயிரிழப்பிற்கு எதிரான போராட்டமும் தற்போது சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்