இலங்கையை வேட்டையாடி சுரண்ட துடிக்கிறது சீனா! அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

இலங்கையை வேட்டையாட சீனா துடிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியுள்ளார்.

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, கொழும்புவில்

இலங்கை வெளியுறவு துறை அமைச்சர், தினேஷ் குணவர்த்தனா உடன், பேச்சுவார்த்தை நடத்திய பின், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, உலகில், சர்வ வல்லமையுள்ள நட்பு நாடாக, இலங்கை விளங்குகிறது. சுதந்திரமான இந்திய- பசிபிக் பிராந்தியத்தின் அடையாளச் சின்னமாக, இலங்கை உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலில், சீனாவை ஆளும் கம்யூனிஸ் கட்சி, இலங்கையை வேட்டையாடி, சுரண்டத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்காவோ, இலங்கையை நட்பு நாடாகவே பார்க்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆக்கபூர்வ பேச்சு நடத்தப்பட்டது. ஜனநாயக மாண்புகளை பாதுகாக்க, இலங்கைக்கு அமெரிக்கா தோள் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக, இந்திய - பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் இருக்கிறது.

தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு வலுசேர்க்க, இலங்கையில் தன் ஆதிக்கத்தை பரப்பும் முயற்சியில், சீனா தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்