2 வயது குழந்தையோடு தூங்கி கொண்டிருந்த 28 வயது இளம் தாயார்! நள்ளிரவில் வீடு புகுந்த இளைஞனால் நேர்ந்த கொடூரம்

Report Print Raju Raju in அமெரிக்கா
300Shares

அமெரிக்காவில் இளம் தாயாரின் வீட்டுக்குள் நள்ளிரவு நுழைந்து அவரை பலாத்காரம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் Allen Busby (32) என்ற நபர் 28 வயது இளம்பெண்ணின் வீட்டுக்குள் நள்ளிரவு 1 மணிக்கு புகுந்துள்ளார்.

பின்னர் தூங்கி கொண்டிருந்த அப்பெண் கண்விழித்த போது எதிரில் Allen இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் இளம்பெண்ணை Allen பலாத்காரம் செய்திருக்கிறார், அந்த சமயத்தில் அவரின் 2 வயது குழந்தை தூங்கி கொண்டிருந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு தகவல் சொன்ன நிலையில் சம்பவ இடத்துக்கு வந்தனர், ஆனால் அதற்குள் Allen தப்பியோடிவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், Allen எனக்கு அறிமுகமானவர் தான். அவர் என் வீட்டுக்குள் புகுந்து என்னை தாக்கியதோடு பலாத்காரமும் செய்துவிட்டார் என கூறினார்.

இதை தொடர்ந்து பொலிசார் தலைமறைவாக இருந்த Allen-ஐ கைது செய்துள்ளனர், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்