கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா தவறான திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது!: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Report Print Karthi in அமெரிக்கா
56Shares

சர்வதேச அளவல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.5 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நாடு முழுவதும் தொடர்ந்து இடைவிடாது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் குறித்து வெள்ளை மாளிகையின் கொரோனா பணிக்குழு தற்போது எச்சரித்துள்ளது.

சமீபத்தில் ஒன்பது மாகாணங்களில் தொற்று பரவல் விகிதம் அதிகரித்துள்ளதால் அதைத் தடுப்பதற்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு மற்றும் மிட்வெஸ்ட் பகுதிகள் கொரோனா தொற்று பாதிப்பில் பெரிய பங்கு வகிக்கின்றன. "நாம் மிகவும் கடினமான பாதையில் செல்கிறோம், நாம் தவறான திசையில் செல்கிறோம்" என்று முன்னணி பணிக்குழு உறுப்பினரும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் அந்தோனி ஃபவுசி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 47 மாகாணங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

"நிலைமைகள் மாறாமல் தொடர்ந்தால், கூடுதல் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறப்புகள் அதிக அளவில் இருக்கும்" என்று புதன்கிழமை இரவு தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் ஃபவுசி கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் தொற்று பரவலை தடுக்க நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் பணிக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 89.5 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இதுவரை 2.28 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்