அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் (42) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணம் அடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் ஜூனியர், அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் Rudy Giuliani-ன் மகன் Andrew Giuliani-யும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.