அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை விவகாரம்: பதவியிழக்க இருக்கும் ட்ரம்பின் மோசமான எண்ணம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
476Shares

அதிபர் பதவியிலிருந்து இறங்கும் முன், அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ட்ரம்ப்.

இந்த தகவலை அமெரிக்க ஊடகமான The Hill தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்த திட்டத்தை நிறைவேற்ற ட்ரம்ப் நிர்வாகம் அவரை வற்புறுத்தி வருவதாக பலரும் The Hill பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்களாம்.

பல நல்ல விடயங்களை தனது பதவிக்காலத்தில் செய்ய வாய்ப்பிருந்தபோதெல்லாம் உருப்படியாக எதையும் செய்யாத ட்ரம்ப் நிர்வாகம், இப்போது ட்ரம்ப் பதவியிலிருந்து இறங்கும் முன் மோசமான விடயங்களை நிறைவேற்றத் துடிக்கிறது.

தற்போதைய சட்டத்தின்படி, அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தானாகவே அமெரிக்க குடிமக்களாகிவிடுவார்கள். இந்த திட்டத்தைத்தான் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆணை ஒன்றை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார் ட்ரம்ப்.

சீனாவை குறிவைக்கும் வகையில், H-1B விசா முறையிலும் ட்ரம்ப் நிர்வாகம் மாற்றங்கள் செய்ய இருப்பதாக The Hill தெரிவித்துள்ளது.

அத்துடன், பைடன் பொறுப்பேற்பதற்கு முன், மேலும் மூன்று பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றவும் ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் The Hill தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்