ஓடும் ரயில் முன் தள்ளிடப்பட்ட பெண் இவர்தான்: அவர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூயார்க்கில் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட பெண்ணின் புகைப்படமும், அவரைக் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் Manhattan சுரங்க ரயில் பாதையில், ஒரு இளைஞர் திடீரென பெண் ஒருவரை வேகமாக ரயில் முன் தள்ளிவிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த பெண்ணை தள்ளி விட்ட அந்த இளைஞரின் பெயர் Aditya Vemulapati (24) என தெரியவந்தது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இதற்கிடையில், தள்ளிவிடப்பட்ட அந்த பெண்ணின் பெயர் Liliana Sagbaicela (40) என்று தெரியவந்துள்ளது.

Brooklynஇல் வசிக்கும் Liliana, housekeeper ஆக பணி செய்கிறார். அவருக்கு கணவரும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ரயிலின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளத்துக்கும் சுவருக்கும் நடுவில் ஒடுங்கிக்கொண்டிருந்த Lilianaவை பொலிசார் மீட்டார்கள்.

அதிர்ஷ்டவசமாக, அவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தன. உண்மையாகவே சொல்கிறேன், எனக்கு எதுவுமே நினைவில்லை என்கிறார் Liliana. Bellevue மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின், மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் நடந்ததை விளக்கியிருக்கிறார்கள்.

ஆனால், இல்லை இல்லை, நான் மயங்கி விழுந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் Liliana.

அப்போது அவரிடம் பொலிசார் ஒருவர், இல்லை, நீங்கள் மயங்கிவிழவில்லை, எங்களிடம் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

அவரை தள்ளிவிட்ட Aditya மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்